/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மினி பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 22 பேர் காயம் டிரைவர் துாக்கத்தால் விபரீதம்

ADDED : மே 30, 2024 01:58 AM

கிருஷ்ணகிரி:சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் சாகுல்ஹமீத், 54. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு தன் குடும்பத்தினர், 13 பெண்கள் உட்பட, 22 பேருடன், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு மினி பஸ்சில் சுற்றுலா புறப்பட்டார்.
மினி பஸ்சை, திருவள்ளூர் மாவட்டம் அத்தியால்பேட்டையை சேர்ந்த கரீமுல்லா, 48, என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, அந்த மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பொறியியல் கல்லுாரி அருகே சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து மீடியனில் மோதி கவிழ்ந்தது.
இதில், பஸ்சின் முன் மற்றும் மேல் பகுதி நசுங்கியது. கந்திக்குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதியினர் மினிபஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய, 22 பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
டிரைவர் கரீமுல்லா உட்பட, 15 முதல், 65 வயது வரையிலான, 16 பேர் படுகாயங்களுடனும், ஆறு பேர் லேசான காயங்களுடனும் சிகிச்சை பெறுகின்றனர்.
டிரைவர் கரீமுல்லா, ஆம்பூரை கடந்தது முதலே துாங்கியபடி பஸ்சை ஓட்டி வந்து உள்ளார். அதனால், டிரைவருக்கு டீ வாங்கி கொடுத்து, 'சிறிது நேரம் ஓய்வெடுங்கள்' என்று கூறியுள்ளனர். அதை கேட்காத அவர், துாங்கிய படி பஸ்சை ஓட்டியதால் தான் விபத்து நடந்ததாக போலீசார் கூறினர்.