/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது
/
வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது
வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது
வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது
ADDED : மே 30, 2024 12:51 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, சின்னபாரண்டபள்ளியை சேர்ந்தவர் சக்திவேல், 46; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், 46, என்பவருக்கும், கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தகராறில் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிந்தராஜ், அவரின் மகன்கள் சாமுவேல், 24, இமானுவேல், 21, இவர்களின் நண்பர் பெரியகரடியூரை சேர்ந்த விஜி, 24, ஆகியோர், சக்திவேலின் வைக்கோல் போருக்கு தீ வைத்தனர். சக்திவேல் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.
சாமுவேல் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் சக்திவேலின் வீட்டிற்கு கத்தியுடன் சென்று, அங்கு துாங்கி கொண்டிருந்த சக்திவேல் உறவினர் தசரதன், 45, என்பவரை, சக்திவேல் என நினைத்து கத்தியால் தாக்கினார். தசரதன் அலறியதால் அங்கிருந்து சாமுவேல் தலைமறைவானார். தசரதன் மனைவி புகார் படி, சாமுவேல் மீது கொலை முயற்சி வழக்கும், அதேபோல் சக்திவேல் புகார் படி, வைக்கோலுக்கு தீ வைத்ததாக சாமுவேல்,
இமானுவேல், விஜி ஆகியோரை கைது செய்த போலீசார், கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.