/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உட்பட 3 பேர் பலி
/
வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உட்பட 3 பேர் பலி
ADDED : ஜூலை 28, 2024 04:24 AM
ஓசூர்: ஓசூர், ராயக்கோட்டை,
உத்தனப்பள்ளி அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில், சிறுவன் உட்பட மூன்று பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணம்மா கொத்துாரை சேர்ந்தவர் மதுசூதன், 45, கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா, 40, தனியார் கார்மென்ட்சில் வேலை செய்கிறார். இவர்களுக்கு புனித், 7, கிரிவாஸ், 4, என்ற இரு மகன்கள் உள்ளனர். நேற்று காலை, 8:00 மணிக்கு வேலைக்கு செல்ல மினி பஸ்சில் திவ்யா ஏறினார். பின்னால் ஏறிய அவரது மகன் கிரிவாஸ் தவறி கீழே விழுந்தான். இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை எடுத்ததால், முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே கிரிவாஸ் இறந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓசூர், தின்னுார் ராஜாஜி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 74. இவர் நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு
மத்திகிரி கூட்ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வ-ழியாக வந்த யமகா பைக், பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த கூலிச்சந்திரத்தை சேர்ந்த புனித், 23, படுகாயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
* ராயக்கோட்டை அருகே முத்தம்பட்டியை சேர்ந்தவர் வெங்க-டேசன், 50, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு தனது கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம், 65, என்-பவருடன், ராயக்கோட்டை-கெலமங்கலம் சாலையில் பைக்கில் சென்றார். சொக்கலிங்கம் பைக்கை ஓட்டினார். திரு.வி.க., நகர் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, பைக்குடன் கீழே விழுந்து படுகாயமடைந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே பலி-யானார். சொக்கலிங்கம் காயமடைந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

