/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
௩௮ பவுன் நகை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
/
௩௮ பவுன் நகை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
௩௮ பவுன் நகை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
௩௮ பவுன் நகை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
ADDED : மே 25, 2024 02:47 AM
ஈரோடு: ஈரோடு, குமலன்குட்டை செல்வம் நகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன், 38; கோவையில் ஐ.டி., நிறுவன ஊழியாக பணி செய்கிறார்.
கடந்த, 19ல் குடும்பத்துடன் உறவினரின் திருமணத்துக்கு சென்றவர், இரவில் வீடு திரும்பினார். குடும்பத்தினர் அணிந்திருந்த, 38.5 பவுன் நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டு, பீரோவில் வைத்து பூட்டி துாங்க சென்றார்.
இரவில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், மகேஸ்வரனின் பெற்றோர் வீட்டுக்கு வெளியே துாங்கினர். இதனால் சுற்றுச்சுவரின் கதவு மட்டும் பூட்டிவிட்டு, வீட்டின் கதவு திறந்திருந்தது.
காலையில் எழுந்து பார்த்தபோது, 38.5 பவுன் நகை, வீட்டில் இருந்த மொபைல்போன் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு தலைமையில், இரு தனிப்படை அமைத்து தேடினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், ஈரோடு, மாணிக்கம்பாளையம் தென்றல் நகரை சேர்ந்த மகேந்திரன், 19, மற்றும் இரு சிறுவர் என மூவரை கைது செய்தனர்.
அவர்களிடம், 38.5 பவுன் நகை, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

