/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓடும் ரயிலில் 350 பவுன் கொள்ளை தனிப்படை போலீஸ் விசாரணை
/
ஓடும் ரயிலில் 350 பவுன் கொள்ளை தனிப்படை போலீஸ் விசாரணை
ஓடும் ரயிலில் 350 பவுன் கொள்ளை தனிப்படை போலீஸ் விசாரணை
ஓடும் ரயிலில் 350 பவுன் கொள்ளை தனிப்படை போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 07, 2024 04:03 AM
சேலம்: கேரளாவில் இருந்து சேலம் வழியே சென்னை சென்ற ரயிலில், நகை வியாபாரியிடம், 350 பவுன் கொள்ளையடித்த கும்பல் குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே சேவலுாரை சேர்ந்த, நகை வியாபாரி கிக்சன், 47. இவர் நகை கடைகள், விற்பனை நிறுவனங்களுக்கு ஆபரணங்களை தயாரித்து வினியோகிக்கிறார். இவரிடம் கடந்த மார்ச், 10ல் சென்னையை சேர்ந்த பிரபல நகை கடை நிறுவனம், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், 350 பவுன்(2.5 கிலோ) ஆபரணங்களுக்கு ஆர்டர் கொடுத்தது. அதை தயார் செய்துகொண்ட கிக்சன், கடந்த, 26ல் திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சூரில் ஏறினார்.
முன்பதிவற்ற பயண டிக்கெட் எடுத்த அவர், எஸ்: 1 முன்பதிவு பெட்டியில் ஏறி பாலக்காட்டில், 63 எண் சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டு பெற்று பயணித்தார். 27 அதிகாலை, 3:30 மணிக்கு, ஈரோடு அருகே வந்தபோது நகை பையில் வைத்திருந்த சார்ஜரை எடுத்து, அவரது மொபைல் போனுக்கு போட்டுவிட்டு துாங்கினார். அதிகாலை, 5:00 மணிக்கு ரயில் சேலம், ஜங்ஷன் வந்தபோது விழித்தார்.
அப்போது நகைகள் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர், ரோந்து போலீசாரிடம் அவர் தெரிவித்த நிலையில், ரயில் சேலத்தில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை சென்றது. அங்கிருந்து மீண்டும் சேலம் வந்து, கிக்சன் புகார் அளித்தார்.
ரயில்வே டி.எஸ்.பி., பெரியசாமி விசாரித்து வழக்குப்பதிவு செய்தார். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, எஸ்.பி., அன்பு, 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த கொள்ளையில் வடமாநில கும்பல், திருச்சி ராம்ஜி நகர், ஆந்திராவின் குப்பத்தை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.

