/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கணவனை கொல்ல முயற்சி மனைவி உட்பட 4 பேர் கைது
/
கணவனை கொல்ல முயற்சி மனைவி உட்பட 4 பேர் கைது
ADDED : பிப் 24, 2025 03:13 AM
கடத்துார்: கடத்துார் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்-தவர் பிரதாப், 30. ஓட்டலில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி 22. இவர்களுக்கு, 2 வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரதாப், இரண்டு ஆண்டுகளுக்கு முன், விபத்தில் காயமடைந்தார். இதற்காக அப்பகுதியில், கவுதம்ராஜ், 27, என்பவர் நடத்தி வரும் மெடிக்கல் ஸ்டோருக்கு சென்று, சிவரஞ்சனி மருந்து வாங்கி வந்துள்ளார்.
அப்போது, ஏற்பட்ட பழக்கத்தில், அவருக்கும், கவுதம்ராஜிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த, 2 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்தனர். இதை பிரதாப் கண்டித்துள்ளார். இதனால் சிவ-ரஞ்சனி, கவுதம் ராஜ் இருவரும் சேர்ந்து, பிரதாப்பை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.இதையடுத்து கவுதம்ராஜ் தன் நண்பர்களான அரூர் அருகே உள்ள, தீர்த்தமலை பாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், 23, தாஸ், 27 ஆகியோருடன் சேர்ந்து கடந்த, 17ல் இரவு வீட்டி-லிருந்து பிரதாப்பை தாக்கி, காரில் துாக்கி போட முயற்சித்-தனர். பிரதாப் சத்தம் போடவே, உறவினர்கள் வந்து தடுத்ததால், அவர்கள் தப்பினர். புகாரின் படி, கடத்துார் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், பிரதாப் மனைவி சிவரஞ்சனி, தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் பிரதாப்பை தீர்த்து கட்ட கவுதம்ரா-ஜியிடம் கூறவே, அவர் தன் கல்லுாரி நண்பர்கள் மூலம் பிர-தாப்பை கொல்ல முயற்சித்தது தெரிந்தது.
போலீசார் கவுதம்ராஜ், 27, சிவரஞ்சனி, 22, பிரவீன்குமார், 23, தாஸ், 27, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.