/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
4 டன் ஜெலட்டின் குச்சிகள் குமாரபாளையத்தில் சிக்கின
/
4 டன் ஜெலட்டின் குச்சிகள் குமாரபாளையத்தில் சிக்கின
4 டன் ஜெலட்டின் குச்சிகள் குமாரபாளையத்தில் சிக்கின
4 டன் ஜெலட்டின் குச்சிகள் குமாரபாளையத்தில் சிக்கின
ADDED : மார் 02, 2025 04:27 AM
குமாரபாளையம் : கேரளாவைச் சேர்ந்த பாறைக்கு வெடி வைக்கும் குழுவினர், பாறைகளை வெடி வைத்து தகர்க்க, அந்த மாநில அரசு வழங்கும் குறைந்த அளவிலான ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்துவது வழக்கம். இதில், ஜெலட்டின் குச்சிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், தமிழகத்தின் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் இருந்து வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.
நேற்று மதியம், 12:00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகளை வாங்கி, தக்காளி லோடு ஏற்றி வந்த லாரியில் எடுத்துக்கொண்டு, சங்ககிரி சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளனர். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், லாரியை சோதனை செய்தனர்.
தக்காளி கூடைக்குள் ஜெலட்டின் குச்சிகளை சட்டத்துக்கு விரோதமாக எடுத்து வந்தது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், 4 டன் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.