/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மது அருந்திய போது நண்பர்களுக்குள் தகராறு தனியார் ஊழியர் கொலையில் 5 பேர் கைது
/
மது அருந்திய போது நண்பர்களுக்குள் தகராறு தனியார் ஊழியர் கொலையில் 5 பேர் கைது
மது அருந்திய போது நண்பர்களுக்குள் தகராறு தனியார் ஊழியர் கொலையில் 5 பேர் கைது
மது அருந்திய போது நண்பர்களுக்குள் தகராறு தனியார் ஊழியர் கொலையில் 5 பேர் கைது
ADDED : ஆக 09, 2024 03:23 AM
ஓசூர்: ஓசூரில், மது அருந்தியபோது ஏற்பட்ட வாய்த்தகராறில், தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நண்பர்கள், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மங்கள்ரவிதாஸ், 25; கிருஷ்ண-கிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி ராஜிவ்காந்தி நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது அறையில் கடந்த, 6 ம் தேதி இரவு, 6 பேர் தங்கியதால், இடவசதியின்றி அருகே நண்பர் அஜய் அறையில் மங்கள்ரவிதாஸ் துாங்கினார். மறுநாள், 7ம் தேதி காலை, அவரது அறை வெளிப்புறமாக பூட்-டப்பட்டிருந்தது. அறையின் உள்ளே, முன்தினம் தங்கிய, 6 பேரில் ஒருவரான, ஓசூர் சூடசந்திரத்தை சேர்ந்த உமேஷ், 21, தலையின் பின்பகுதியில் வெட்டு காயங்களுடன் கொலை செய்-யப்பட்டு கிடந்தார். அவருடன் வந்த மற்ற, 5 பேர் தப்பி சென்றி-ருந்தனர்.
ஓசூர் சிப்காட் போலீசார், ஓசூர் பாரதிதாசன் நகரில் வசிக்கும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கீரன்குளத்தை சேர்ந்த சந்துரு, 25, ஓசூர் அருகே சானசந்திரம் விஜயகுமார், 19, கக்கனுார் கார்த்திக், 24, சேலம் மாவட்டம், சேலத்தாம்பட்டி பார்த்தசாரதி, 19, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சின்-னப்பநல்லுார் மகாசக்தி, 20, ஆகிய, 5 பேரை நேற்று கைது செய்-தனர்.
கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தரப்பில் கூறியதா-வது:
நண்பர்களான, 6 பேரும், கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியி-லுள்ள கடையில் மது குடித்தபோது, சந்துருவை தகாத வார்த்-தையால் உமேஷ் திட்டியுள்ளார். பின், ஓசூரில் மங்கள்ரவிதாஸ் அறையில் இரவு தங்கியபோது, மது போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. உமேஷ் கட்டையால் அடித்ததால் ஆத்-திரமடைந்த சந்துரு, அறையிலிருந்த கோடாரியால், உமேஷின் பின்புற தலையில் வெட்டி கொலை செய்தார். பின் உமேஷ் சட-லத்தை அப்படியே விட்டு விட்டு, சந்துரு உட்பட, 5 பேரும் சேலத்திற்கு தப்பினர். கொலையான உமேஷ், ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்-.
இவ்வாறு அவர்கள் கூறினர்.