/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 10:13 AM
கிருஷ்ணகிரி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 அரசு பள்ளிகளும், 2 பகுதி உதவி பெறும் பள்ளிகளும், 42 தனியார் பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் சந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உனிசெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அத்திகானுார் அரசு மேல்நிலைப்பள்ளி, தொகரப்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரியதள்ளப்பாடி அரசு பள்ளி, கிருஷ்ணகிரி மாதிரி பள்ளி என மொத்தம், 6 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அதேபோல கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதி உதவி பெறும் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதைத்தவிர மாவட்டத்தில், 42 தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம், 50 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 46 சதவீதமும், பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 62 சதவீதமும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 70.88 சதவீதமும் என, குறைந்தளவில் தேர்ச்சி பெற்றுள்ளன.