/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சனாதன தர்ம சைத்தன்ய பாத யாத்திரை பயணம் திருமலை திருப்பதிக்கு புறப்பட்ட 500 பக்தர்கள்
/
சனாதன தர்ம சைத்தன்ய பாத யாத்திரை பயணம் திருமலை திருப்பதிக்கு புறப்பட்ட 500 பக்தர்கள்
சனாதன தர்ம சைத்தன்ய பாத யாத்திரை பயணம் திருமலை திருப்பதிக்கு புறப்பட்ட 500 பக்தர்கள்
சனாதன தர்ம சைத்தன்ய பாத யாத்திரை பயணம் திருமலை திருப்பதிக்கு புறப்பட்ட 500 பக்தர்கள்
ADDED : ஆக 04, 2024 01:21 AM
ஓசூர்,
சூளகிரி அருகே, கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து ஆண்டுதோறும் திருமலை திருப்பதி கோவிலுக்கு, வெங்கடேஸ்வரா சேவா டிரஸ்ட் சார்பில், சனாதன தர்ம சைத்தன்ய பாத யாத்திரை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று, 9ம் ஆண்டு பாத யாத்திரை துவங்கியது. முன்னதாக, தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சூளகிரி, காமன்தொட்டி, கோபசந்திரம், கங்காபுரம், திருமலை கவனி கோட்டா உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருமலை திருப்பதி நோக்கி பாத யாத்திரையை துவங்கினர். அத்திமுகம், பலமநேர், காணிப்பாக்கம் வழியாக தினமும் அதிகபட்சம், 35 கி.மீ., துாரம் பயணம் செய்யும் பாத யாத்திரை குழுவினர் வரும், 10ல், திருமலை திருப்பதி கோவிலை சென்றடைந்து, பெருமாளை தரிசனம் செய்கின்றனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டை வெங்கடேஸ்வரா சுவாமி பாத யாத்திரை கமிட்டி சார்பில், 12ம் ஆண்டு சனாதன தர்ம சைத்தன்ய பாத யாத்திரை நேற்று புறப்பட்டது. தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்ம சுவாமி, பேட்டராய சுவாமி, ராம ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையை துவங்கினர். கெலமங்கலம், உத்தனப்பள்ளி, சூளகிரி, வேப்பனஹள்ளி, நாச்சிகுப்பம், குப்பம், காணிப்பாக்கம் வழியாக, திருமலை திருப்பதி கோவிலுக்கு வரும், 10 ல் பக்தர்கள் சென்றடைந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தினமும், 40 கி.மீ., வீதம், 290 கி.மீ., துாரம், ஹரிநாம பஜனையை இசைத்தப்படி பக்தர்கள் நடந்து சென்று கோவிலை அடைகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.