/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,176 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,176 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,176 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,176 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
ADDED : மே 05, 2024 01:59 AM
கிருஷ்ணகிரி:நாடு
முழுவதும் எம்.பி.பிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்பின், நடப்பாண்டு
சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு இன்று (5ம் தேதி) நடக்கிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த பிப்.,9ல் தொடங்கி ஏப்.,10ல்,
முடிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 8 மையங்களில் நீட்
தேர்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, ஊத்தங்கரை மல்லிகை நகரில்
உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் 1,440 மாணவ, மாணவிகள்,
ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்
சின்னமலை பப்ளிக் பள்ளியில் 1,200, ஓசூர் அடுத்த முகுலப்பள்ளி
வனபிரசாத் இண்டர்நேஷ்னல் பள்ளியில், 504, குந்தாரப்பள்ளி ஸ்ரீ
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 504, ஓசூர்
அதியமான் பொறியியல் கல்லாரியில், 480.
காவேரிப்பட்டணம் அடுத்த
சவுளூர் கூட் ரோட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பப்ளிக் பள்ளியில், 360, ஓசூர்
அடுத்த நல்லுார் ஸ்ரீ குருகுலம் செகண்டரி பள்ளியில், 360, கிருஷ்ணகிரி
சுபேதார்மேடு பாரத் இண்டர்நேஷ்னல் சீனியர் செகண்டரி பள்ளியில், 328
மாணவ, மாணவிகள் என மொத்தம், 8 மையங்களில், 5,176 மாணவ, மாணவிகள் நீட்
தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளதுடன், தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து
கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 5:20 மணி வரை தேர்வு நடக்கிறது. தமிழ்,
ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இயற்பியல்,
வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா, 180
மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.