/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணைக்கு 592 கன அடி நீர்வரத்து
/
கெலவரப்பள்ளி அணைக்கு 592 கன அடி நீர்வரத்து
ADDED : செப் 01, 2024 04:52 AM
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 288 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பால், 288 கன அடி நீரும் தென்பெண்ணை ஆறு மற்றும் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 592 கன அடியாக அதிகரித்தது.
அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு இருந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் வினா-டிக்கு, 200 கன அடி, வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு, 88 கன அடி என மொத்தம், 288 கன அடி நீர் அணையிலிருந்து திறக்கப்பட்டது. மீதமுள்ள நீர் அணையில் சேமிக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரில் தொழிற்-சாலை கழிவுகள் கலந்திருந்தது. 200 கன அடி மட்டுமே தென்-பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், குறைந்தளவில் மட்டுமே ரசாயன நுரை ஏற்பட்டது.