/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
6 மலைப்பாம்புகள்ஒரே இடத்தில் பிடிப்பு
/
6 மலைப்பாம்புகள்ஒரே இடத்தில் பிடிப்பு
ADDED : பிப் 21, 2025 01:12 AM
6 மலைப்பாம்புகள்ஒரே இடத்தில் பிடிப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே உள்ள சவுட்டஹள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள ஈஸ்வரன் கோவில் அருகே பாறையின் கீழ் மலைப்பாம்பு உள்ளதாக, தீயணைப்புத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி தீயணைப்பு அலுவலர் சக்திவேல் தலைமையில், ஹரிஹரன், ராஜலிங்கம், பசுபதி ஆகியோர் சென்று, பாறையின் கீழ் பகுதியில் பார்த்த போது, 6 மலைப்பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 10 அடி நீள, 6 மலைபாம்புகளையும் பாதுகாப்பாக பிடித்து, கிருஷ்ணகிரி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறுகையில், ''கிருஷ்ணகிரி வனச்சரகத்தில், மலைப்பாம்புகள், கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகள், கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன், சாரை, கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட பல வகை பாம்புகள் உள்ளன. ஊருக்குள் வரும் பாம்புகளை தொந்தரவும் செய்யாமல், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

