ADDED : மார் 06, 2025 01:46 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில், நேற்று முன்தினம் மாலையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் வந்த லாரியை சோதனையிட்டதில் 23.40 டன் ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்டது தெரிந்தது.
அந்த லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஸ்ரீதரன், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது தகவல் படி, ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே சென்ற மற்றொரு லாரியை சோதனையிட்ட போலீசார், 19.50 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
லாரி டிரைவர் ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த மணி, 33 என்பவரை கைது செய்தனர். அரிசியை அவர், கர்நாடகாவுக்கு கடத்த இருந்ததாக கூறினார்.
இவ்வாறு, பல இடங்களில் மொத்தம், 70 டன் ரேஷன் அரிசி, பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

