sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கனிம வளங்கள் கடத்திய 8 வாகனங்கள் பறிமுதல்

/

கனிம வளங்கள் கடத்திய 8 வாகனங்கள் பறிமுதல்

கனிம வளங்கள் கடத்திய 8 வாகனங்கள் பறிமுதல்

கனிம வளங்கள் கடத்திய 8 வாகனங்கள் பறிமுதல்


ADDED : பிப் 24, 2025 03:09 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தளி அருகே, தேவகானப்பள்ளி ஏரியில், தளி போலீஸ் எஸ்.ஐ., ராஜா சங்கிலி கருப்பன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு சிலர் பொக்லைன் உதவியுடன், டிப்பர் லாரியில் மண் அள்-ளியது தெரிந்தது. அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். 2 யூனிட் மண்ணுடன் லாரி மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

அதேபோல், பர்கூர் தாலுகா, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி வி.ஏ.ஓ., டேனியல்ராஜ், கந்திக்குப்பம் - வரட்டனப்பள்ளி சாலையிலும், நாகோஜனஹள்ளி வி.ஏ.ஓ., ராசியா, வேலம்பட்டி அரசு மேல்நி-லைப்பள்ளி அருகேயும், மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், மலை-சந்து கிராமத்திற்கு அருகிலும், தனித்தனியாக வாகன சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், எம்.சாண்ட், கற்கள், ஜல்லி கொண்டு சென்ற, 4 லாரிகள் மற்றும் இரு டிராக்டரை பறிமுதல் செய்து, கந்திக்குப்பம், நாகரசம்பட்டி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us