/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.87 சதவீதம் தேர்ச்சி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.87 சதவீதம் தேர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.87 சதவீதம் தேர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.87 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 10:11 AM
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச், 1ல் தொடங்கி மார்ச், 22 வரை நடந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 197 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 18,874 மாணவ, மாணவியரில், 17,339 பேர், அதாவது, 91.87 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.
இதில், தேர்வெழுதிய, 8,732 மாணவர்களில், 7,801 பேரும், 10,142 மாணவியரில், 9,538 பேரும் தேர்ச்சியடைந்தனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 89.34 சதவீதமாகவும், மாணவியர் தேர்ச்சி விகிதம், 94.04 சதவீதமாகவும் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவியர், 5 சதவீதம் கூடுதலாக தேர்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரியில் கடந்தாண்டு தேர்ச்சி விகிதம், 89 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு, 2.87 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 107 அரசு பள்ளிகளில், 5,329 மாணவர்களும், 6,915 மாணவியர் என மொத்தம், 12,244 பேர் தேர்வு எழுதினர். அதில், 4,462 மாணவர்கள், 6,350 மாணவியர் என மொத்தம், 10,812 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள், 83.73 சதவீதமும், மாணவியர், 91.83 சதவீதமும் என சராசரியாக, 88.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.