/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி பறக்க விடப்பட்ட பிரமாண்ட பலுான்
/
100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி பறக்க விடப்பட்ட பிரமாண்ட பலுான்
100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி பறக்க விடப்பட்ட பிரமாண்ட பலுான்
100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி பறக்க விடப்பட்ட பிரமாண்ட பலுான்
ADDED : மார் 25, 2024 01:05 AM
ஓசூர்:ஓசூரில்,
போலீசார் மூலம் கொடி அணிவகுப்பு நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு, 100
சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி, பிரமாண்ட பலுானை பறக்க விட்டார்.
கிருஷ்ணகிரி
லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர்கள் எந்த பயமும்
இல்லாமல் ஓட்டளிக்கும் வகையில், ஓசூரில் நேற்று மாலை போலீசார் சார்பில்
கொடி அணிவகுப்பு நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான
சரயு, எஸ்.பி., தங்கதுரை தலைமையில், உள்ளூர் போலீசார் மற்றும்
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என, 100க்கும்
மேற்பட்டோர், ஓசூர் ராம்நகரில் கொடி அணிவகுப்பை துவங்கினர். பழைய
பெங்களூரு சாலை, எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோடு, தாலுகா அலுவலக சாலை
வழியாக சென்ற கொடி அணிவகுப்பு, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
அருகே நிறைவு பெற்றது.
தொடர்ந்து, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் மொட்டை
மாடியில் இருந்தவாறு, லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டளிப்பை
வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு, பிரமாண்ட பலுானை பறக்க
விட்டு, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மாநகராட்சி கமிஷனர் சினேகா, டி.ஆர்.ஓ., சாதனை குறள், டி.எஸ்.பி.,
பாபுபிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

