/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஐபோன்' வாங்க ஆசைப்பட்டு ரூ.5.20 லட்சம் இழந்த மாணவி
/
'ஐபோன்' வாங்க ஆசைப்பட்டு ரூ.5.20 லட்சம் இழந்த மாணவி
'ஐபோன்' வாங்க ஆசைப்பட்டு ரூ.5.20 லட்சம் இழந்த மாணவி
'ஐபோன்' வாங்க ஆசைப்பட்டு ரூ.5.20 லட்சம் இழந்த மாணவி
ADDED : ஜூலை 17, 2024 06:54 AM
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கும்மாரபேட்டையை சேர்ந்தவர் மகேஸ்வரி, 22; கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. இவரது, டெலிகிராம் சமூகவலைதள பக்கத்திற்கு ஏப்., 28ல் வந்த செய்தியில், 'குறைந்த விலைக்கு 'ஐபோன்'கள் கிடைக்கும்' எனக் கூறப்பட்டு இருந்தது. அதை நம்பி, அந்த, 'லிங்க்'கில் உள்ள அலைபேசி எண்ணை மகேஸ்வரி தொடர்பு கொண்டார். அதில் பேசியவர்கள், மிக குறைந்த விலையில், ஐபோன்கள் கிடைக்கும் எனக்கூறி, மாடல்களையும் அதன் விலைகளையும் கூறினர்.
தனக்கும், நண்பர்களுக்கும் ஐபோன் வாங்க முடிவு செய்த மகேஸ்வரி, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 5.20 லட்சம் ரூபாயை அனுப்பினார்; ஐபோன் வரவில்லை. சந்தேகமடைந்த மகேஸ்வரி, தான் தொடர்பு கொண்ட மொபைல் எண்ணுக்கு பேச முயன்றபோது, அந்த எண்கள், 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தன.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேஸ்வரி, கிருஷ்ணகிரி 'சைபர் கிரைம்' போலீசாரிடம் புகார் கொடுத்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.