/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெயிலில் தவிக்கும் மக்களுக்காக பஸ் ஸ்டாண்டிற்குள் தற்காலிக பந்தல்
/
வெயிலில் தவிக்கும் மக்களுக்காக பஸ் ஸ்டாண்டிற்குள் தற்காலிக பந்தல்
வெயிலில் தவிக்கும் மக்களுக்காக பஸ் ஸ்டாண்டிற்குள் தற்காலிக பந்தல்
வெயிலில் தவிக்கும் மக்களுக்காக பஸ் ஸ்டாண்டிற்குள் தற்காலிக பந்தல்
ADDED : மே 02, 2024 11:18 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மாவட்டத்தின் முக்கிய நகராக பார்க்கப்படுகிறது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டிலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூருவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
மேலும் காவேரிப்பட்டணம் அருகிலுள்ள காரிமங்கலம், போச்சம்பள்ளி, சாப்பரம், வேலம்பட்டி பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல டவுன் பஸ்களுக்கும் பஸ் ஸ்டாண்டுக்குத்தான் வர வேண்டும்.
நாளுக்குநாள் அதிகரித்து வரும் கோடை வெயிலால், மக்கள் அவதியுற்று வரும் நிலையில், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டிற்குள், இரு ஷாமியானாக்களை காவேரிப்பட்டணம், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தன் சொந்த செலவில் அமைத்துள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டமாக வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிற்பதற்கு போதிய இடவசதி இல்லை. இருந்தாலும், நிழல் இல்லை. அதனால், 40 அடிக்கு, 20 அடி அளவில் இரு ஷாமியானாக்களை பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே போட்டுள்ளேன்.
இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் நின்று வெயில் கொடுமையிலிருந்து தங்களை காத்து கொள்ள உதவும். கோடைகாலம் முடியும் வரை, இந்த தற்காலிக நிழற்கூட வாடகையையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். தண்ணீர் பந்தல் என்ற பெயரில் பேனர், தோரணங்கள் போன்ற செலவுகளை விட, இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

