/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு
/
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு
ADDED : ஜூலை 30, 2024 03:08 AM
தர்மபுரி: தர்மபுரியிலுள்ள அனைத்து முருகன் கோவில்களில், ஆடி கிருத்-திகை விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதை-யொட்டி, முருகன் கோவில்களில் அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன.
தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்கார சேவை நடந்தது. அதேபோல், தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், தர்மபுரி நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், கடைவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில், கோட்டை சண்முக-நாதர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்திலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்-ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.இண்டூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், லளிகம் தண்டாயுதபாணி சுவாமி கோவில், பள்ளிப்பட்டி சுப்பிர-மணிய சுவாமி கோவில், கம்பைநல்லுார் சிவசுப்பிரமணியசாமி கோவில், அடிலம் முருகன் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையை-யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.