/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலைமறைவு போக்சோ குற்றவாளி ஓராண்டிற்கு பின் ஒடிசாவில் கைது
/
தலைமறைவு போக்சோ குற்றவாளி ஓராண்டிற்கு பின் ஒடிசாவில் கைது
தலைமறைவு போக்சோ குற்றவாளி ஓராண்டிற்கு பின் ஒடிசாவில் கைது
தலைமறைவு போக்சோ குற்றவாளி ஓராண்டிற்கு பின் ஒடிசாவில் கைது
ADDED : ஆக 22, 2024 01:15 AM
தலைமறைவு போக்சோ குற்றவாளி
ஓராண்டிற்கு பின் ஒடிசாவில் கைது
ஓசூர், ஆக. 22-
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சாசிகண்ட மாலிக், 29; ஓசூர் பேகேப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்தாண்டு ஏப்.,ல், 14 வயதான காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை, தன் அறைக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சாசிகண்ட மாலிக், ஒடிசா மாநிலத்திற்கு தப்பினார். கடந்த சில நாட்களுக்கு முன், ஒடிசா சென்ற ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், பந்தாரா பகுதியில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த, சாசிகண்ட மாலிக்கை கைது செய்து, ஓசூருக்கு நேற்று அழைத்து வந்து, சிறையில் அடைத்தனர்.