/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏர் கம்ப்ரசர் வெடித்து வாட்டர் மேன் படுகாயம்
/
ஏர் கம்ப்ரசர் வெடித்து வாட்டர் மேன் படுகாயம்
ADDED : ஜூலை 31, 2024 10:36 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 51, பஞ்., வாட்டர் மேன்; இவர் நேற்று காலை தன் சொந்த வேலையாக தேன்கனிக்கோட்டைக்கு டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். மொபட் டயர் பஞ்சரானதால், தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் சித்திக் அலி, 45, என்பவரது கடையில், பஞ்சர் போட நிறுத்தி விட்டு, கடைக்குள் இருந்த ஏர் கம்ப்ரசர் அருகே சென்று அமர்ந்திருந்தார். இயங்கி கொண்டிருந்த கம்ப்ரசர் திடீரென வெடித்து சிதறியது. இதில், அவரது வலது கால் கடுமையாக சிதைந்து படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.