/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெறும் 350 போலீசார் போதுமா? ஓசூரில் குற்றங்கள் அதிகரிப்பு
/
வெறும் 350 போலீசார் போதுமா? ஓசூரில் குற்றங்கள் அதிகரிப்பு
வெறும் 350 போலீசார் போதுமா? ஓசூரில் குற்றங்கள் அதிகரிப்பு
வெறும் 350 போலீசார் போதுமா? ஓசூரில் குற்றங்கள் அதிகரிப்பு
ADDED : பிப் 23, 2025 01:29 AM
ஓசூர்,:கர்நாடகா - தமிழக எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கின்றன.
கர்நாடகாவில் கொலை செய்து, உடலை ஓசூரில் வீசுவதும் நடக்கின்றன. ஓசூரில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், கர்நாடகா சென்று பதுங்கி விடுகின்றனர்.
ஓசூர் உட்கோட்டத்திலுள்ள ஓசூர் டவுன், சிப்காட், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் மட்டும், 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால், ஸ்டேஷன்களில், 350 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
மாவட்டத்தில், 2023ல், 59 கொலை, 2024ல், 57 கொலைகள் நடந்துள்ளன. அதில், ஓசூர் உட்கோட்டத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவாகியுள்ளன.
ஓசூர் உட்கோட்டத்திலுள்ள எட்டு ஸ்டேஷன்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தலா, 10 சதவீதத்திற்கும் மேல் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகின்றன.
குற்றப்பிரிவு வழக்குகளையும், சட்டம் - ஒழுங்கு போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்ப்பாட்டம், போராட்டம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சட்டம் - ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டியுள்ளது.
இருக்கும், 350 போலீசாரை வைத்து சமாளிக்க முடியாததால், 16 மணி நேரம் வரை வேலை வாங்குவதால், போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையில், அதுவும் வனப்பகுதிகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் ஓராண்டாக நிரப்பப்படவில்லை.
போலீசார் கூறியதாவது:
ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இரவு ரோந்து பணி செல்ல வேண்டியுள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிட முடிவதில்லை. அதிக குற்றம் நடப்பதால், தனியாக ஒரு குற்றப்பிரிவு ஸ்டேஷனை உருவாக்கி, அதற்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை நியமித்தால், சட்டம் - ஒழுங்கு போலீசாரின் பணி, சற்று குறையும்.
மாவட்டத்தில், அதிகபட்சமாக ஓசூர் நீதிமன்றங்களில், 6,000 வழக்குகள் விசாரணையில் உள்ளன. ஒரு மாவட்டத்திற்கு உண்டான அளவிற்கு, ஓசூரில் மட்டுமே வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.