/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானைகள் ஊருக்குள் வருவதை கண்டறிய செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தம்
/
யானைகள் ஊருக்குள் வருவதை கண்டறிய செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தம்
யானைகள் ஊருக்குள் வருவதை கண்டறிய செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தம்
யானைகள் ஊருக்குள் வருவதை கண்டறிய செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தம்
ADDED : ஜூலை 30, 2024 03:07 AM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், யானைகள் ஊருக்குள் வருவதை கண்-டறிய, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவிலிருந்து ஆண்-டுதோறும் அக்., ல் வெளியேறும், 150 க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லை தளி, ஜவளகிரி வனப்பகுதியில் நுழைந்து, நொகனுார், தேன்கனிக்கோட்டை, ஓசூர், மகாராஜ-கடை வனப்பகுதி வழியாக, ஆந்திர மாநிலம், வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று விட்டு, ஏப்., மே மாதங்களில் திரும்பும். இக்காலகட்டத்தில், யானை மனித மோதல்களால் உயிரிழப்புகளும், விவசாய பயிர்கள் சேதமாகியும் வருகின்றன.
ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் வெளியேறும் முக்கிய, 17 பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு, சூரிய மின்சக்தி மூலமாக, 24 மணி நேரமும் இயங்கும், 360 டிகிரியில் சுழலும் செயற்கை நுண்-ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் தனித்தனி சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களை, ஓசூர் மத்திகிரியிலுள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துடன் இணைக்க, டவர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.'டிவி' மற்றும் கம்ப்யூட்டர் மூலம் கேமராக்களை, 24 மணி நேரமும் கண்காணிக்க ஊழியர்கள் உள்ளனர். கேமராக்கள் மூலம், யானைகள் வருவது தெரிந்தால், வனத்துறை அலுவலகத்-திற்கு, 'அலர்ட்' வரும். அதன் மூலம், யானை வரும் பகுதி கிராம மக்களை உஷார்படுத்தி, உயிரிழப்பை தடுக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது. கேமராக்களை யானைகள் சேதப்படுத்தாமல் இருக்க, கேமரா கம்பத்தை சுற்றி, சூரிய மின்வேலி அமைக்கப்-பட்டுள்ளது. பொருத்தப்பட்ட, 17 கேமராக்களின் செயல்-பாட்டை கண்காணிக்க, மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதை டி.எஸ்.பி.,க்கள் சாந்தி, பாபுபிரசாந்த் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், ஓசூர் வனக்கோட்ட வன உயி-ரின காப்பாளர் கார்த்திகேயனி, உதவி வன பாதுகாவலர்கள் கிரீஸ் பால்வே, ராஜமாரியம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.