/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்கள் முன்னேற்றத்துக்கான சேவை புரிந்தவர்களுக்கு விருது
/
பெண்கள் முன்னேற்றத்துக்கான சேவை புரிந்தவர்களுக்கு விருது
பெண்கள் முன்னேற்றத்துக்கான சேவை புரிந்தவர்களுக்கு விருது
பெண்கள் முன்னேற்றத்துக்கான சேவை புரிந்தவர்களுக்கு விருது
ADDED : மே 30, 2024 12:53 AM
கிருஷ்ணகிரி, பெண்கள் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்தவர்கள் சுதந்திர தின விருது பெற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, தமிழக முதல்வர் சுதந்திர தின விழாவில், விருதுகள் வழங்கும் வகையிலான கருத்துருக்களை அனுப்புவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பிப்பவர்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் செய்திருக்க வேண்டும். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றி வரும், சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள், https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே வரும், ஜூன், 20க்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.