/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் நவீன ஆவின் பாலகம் கட்ட பூமி பூஜை

ADDED : செப் 05, 2024 03:39 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி, அரசு மருத்துவக் கல்-லுாரி வளாகத்தில், ஆவின் நிறுவனம் சார்பில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன பாலகம் கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு, பூமி பூஜை செய்து துவக்கி வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றி-யத்தில் தற்போது நாளொன்றுக்கு, 1.15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளுர் விற்பனைக்-காக நாளொன்றுக்கு, 35,000 லிட்டர் பால், பாக்கெட்டுகளில் அனுப்பப்படுகிறது. பால் உபபொருட்கள் நாளொன்றுக்கு, 2.00 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ண-கிரி அரசு மருத்துவக் கல்லுாரி வாளகத்தில், நவீன பாலகம் அமைப்பதற்கு, 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுமான பணி-களும், 6.50 லட்சம் ரூபாய் செலவில் குளிர்சாதன பெட்டி மற்றும் தளவாட உபகரணங்களும் நிறுவப்பட உள்ளன. இவ்-வாறு, அவர் பேசினார்.மருத்துவ கல்லுாரி முதல்வர் பூவதி, துணைப்பதிவாளர் (பால்வளம்) விஸ்வேஸ்வரன், ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு, நுகர்வோர் சங்க மாநில பொதுச் செய-லாளர் சந்திரமோகன், ஆவின் அலுவலர்கள் மற்றும் பணியா-ளர்கள் கலந்து கொண்டனர்.