/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெளுத்து வாங்கிய மழை; 10,000 கோழிகள் சாவு
/
வெளுத்து வாங்கிய மழை; 10,000 கோழிகள் சாவு
ADDED : ஆக 12, 2024 11:14 PM

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், மிண்டிகிரி அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ள நீர் புகுந்தது. அத்திகானுாரில், மழைநீர் வெளியேற வழியின்றி, 10க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. ஆத்திரமடைந்த மக்கள் கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமரசம் செய்தனர்.
மாரிசெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கானாங்குட்டை ஏரி நிரம்பி, உபரி நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள், அதில் மீன் குஞ்சுகளை விட்டு, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்துார் அருகே குள்ளம்பட்டியில் ரஜினி என்பவரது கோழிப்பண்ணைக்குள் மழைநீர் புகுந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4,000 கோழிக்குஞ்சுகள் பலியாகின. அதேபோல், சின்னஆலேரஹள்ளியில் பாஸ்கர் என்பவரின் கோழிப்பண்ணைக்குள் புகுந்த மழைநீரால், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6,000 கோழிகள் பலியாகின.

