/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
ADDED : ஆக 27, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி, சத்யசாய் நகரை சேர்ந்-தவர் ராஜேஸ்வரி, 53; இவர் கடந்த, 16ல் வீட்டை பூட்டி விட்டு, தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றார். நேற்று முன்-தினம் திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்-கப்பட்டிருப்பதையும் வீட்டிலிருந்த, ஆறரை பவுன் நகைகள் திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.