/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க.,வின் ஊழலை வெளிச்சம் போட அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க பிரசாரம்
/
தி.மு.க.,வின் ஊழலை வெளிச்சம் போட அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க பிரசாரம்
தி.மு.க.,வின் ஊழலை வெளிச்சம் போட அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க பிரசாரம்
தி.மு.க.,வின் ஊழலை வெளிச்சம் போட அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 12:03 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து ஒரப்பம், பாலிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, கந்திக்குப்பம், எலத்தகிரி, வரட்டனப்பள்ளி, சிந்தகம்பள்ளி உள்ளிட்ட, 39 கிராமங்களில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பிரசாரம் செய்து பேசியதாவது:
தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள், 'இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அதிலுள்ள கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியல், ஊழலில் திளைத்த கட்சிகள். எல்லா துறையில் ஊழல் செய்யும், தி.மு.க., அரசே அதற்கு உதாரணம். அக்கட்சியின் அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதில், உள்ள ரகசியங்கள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மார்டின் என்பவர், தி.மு.க.,வுக்கு, 530 கோடி ரூபாய் தேர்தல் பத்திரமாக வழங்கியுள்ளார். அதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை, சிந்திக்க வேண்டும்.
தி.மு.க.,வின் இந்த ஊழல் செயல்பாடுகளை, வெளிச்சம் போட்டு காட்ட, லோக்சபா தேர்தலில், மக்கள், அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும். இங்கு வெற்றி பெறும், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் லோக்சபாவில் இது குறித்து பேசி, மத்திய அரசின் துணையோடு அதை செய்து முடிப்பர்.இவ்வாறு, அவர் பேசினார்.

