/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கந்து வட்டி வசூல் இருவர் மீது வழக்கு
/
கந்து வட்டி வசூல் இருவர் மீது வழக்கு
ADDED : மே 21, 2024 10:44 AM
ஓசூர்: ஓசூர், சீத்தப்பன்குட்டையை சேர்ந்தவர் நவீன்குமார், 30; ஓசூரில் ஓட்டல் நடத்தி வரும் இவர், குமுதேப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம், 2 லட்சம் ரூபாய், ஓசூரை சேர்ந்த ஜோசுவா என்பவரிடம், 3 லட்சம் ரூபாய், ஓராண்டுக்கு முன் கடன் வாங்கினார். இதற்கு சந்தோசும், ஜோசுவாவும் தலா, 50,000 ரூபாய் வட்டி வாங்கியுள்ளனர்.
அவ்வப்போது வட்டி வாங்கி வந்த இவர்கள், அசல் தொகையை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் நவீன்குமாரை, சந்தோசும், ஜோசுவாவும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து நவீன்குமார் நல்லுார் போலீசில் அளித்த புகார் படி, சந்தோஷ் மற்றும் ஜோசுவா மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

