/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்சோ பிரிவில் தொழிலாளி மீது வழக்கு
/
போக்சோ பிரிவில் தொழிலாளி மீது வழக்கு
ADDED : ஆக 11, 2024 03:41 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி, பொலவகாளிபாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 50; தொழிலாளியான இவர், 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
மாநகராட்சி நிர்வாகஅலுவலர்கள் இடமாற்றம்
சேலம்: சேலம் மாநகராட்சி நிர்வாக அலுவலராக பணியாற்றிய கார்த்திகேயன் கோவை மாநகராட்சிக்கும், அங்கு பணியாற்றிய சுல்பிகர் அகமது, சேலம் மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல் ஈரோடு மாநகராட்சி நிர்வாக அலுவலராக பணியாற்றிய குணசுந்தரம், கோவை மாநகராட்சிக்கும், அங்கு பணியாற்றிய கார்த்திகேயன், ஈரோடு மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.

