/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளிகளில் 'மாணவர் மனசு பெட்டி' ஹெச்.எம்.,களுக்கு சி.இ.ஓ., அறிவுறுத்தல்

ADDED : செப் 05, 2024 03:32 AM
கிருஷ்ணகிரி: ''பள்ளிகளில், 'மாணவர் மனசு பெட்டி'கள் கண்டிப்பாக வைத்தி-ருக்க வேண்டும்,'' என, தலைமையாசிரியர்களுக்கு, கிருஷ்ண-கிரி மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலையப்பள்ளியில் நடந்த, 100க்கும் மேற்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுடனான கலந்-தாய்வு கூட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:பள்ளி மாணவர்களை கண்காணிப்பதிலும், அவர்களது பாதுகாப்-பிலும் தலைமை ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியாட்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. பள்ளி கழிவறை, அடிப்படை வசதிகள் குறித்து, அடிக்கடி தெரிவிக்க வேண்டும். மாணவ, மாணவிய-ருக்கு, 'குட் டச்' மற்றும் 'பேட் டச்' குறித்து தெளிவாக எடுத்து-ரைக்க வேண்டும். அவர்கள் ஏதேனும் குறைகளை கூறினால், முதலில் அதை கேட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், அலட்சியம் காட்டக்கூடாது. இது குறித்து, 'சைல்டு லைன்' அமைப்புக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, ஒவ்-வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியருக்காக வைக்கப்படும், 'மாணவர் மனசு பெட்டி'கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்