/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களுடன் முதல்வர் திட்டம்: மகனுார்பட்டியில் முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்டம்: மகனுார்பட்டியில் முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டம்: மகனுார்பட்டியில் முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டம்: மகனுார்பட்டியில் முகாம்
ADDED : ஜூலை 24, 2024 02:11 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட மகனுார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மகனுார் பட்டி, எக்கூர், கோவிந்தாபுரம், பெரிய தள்ளாடி, கீழ்மத்துார் போன்ற பஞ்., மக்கள் பயன்பெறும் வகையில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது.
ஒன்றிய சேர்மன் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் தவமணி, பாலாஜி முன்னிலை வகித்தனர். பஞ்., தலைவர்கள், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜப்பன், உதவி பொறியாளர் பிரேமாவதி, மகளிர் ஊர் நல அலுவலர் காந்திமதி மற்றும் மின்சாரம், சுகாதாரம், வருவாய்,வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.