/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி மாணவி விவகாரம் கிறிஸ்துவ மதபோதகர் கைது
/
கி.கிரி மாணவி விவகாரம் கிறிஸ்துவ மதபோதகர் கைது
ADDED : செப் 10, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் பள்ளியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான தற்கொலை செய்து கொண்ட, சிவராமனின் நெருங்கிய நண்பர் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த கிறிஸ்துவ மதபோதகர் டேனியல் அருள்ராஜ், 43, என்பவரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர்.
இதனால் கைது எண்ணிக்கை, 17 ஆக உயர்ந்தது. சிவராமன் நடத்திய போலி என்.சி.சி., முகாமில், அவருக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக, டேனியல் அருள்ராஜ் கைது செய்யப்பட்டுஉள்ளார் என போலீசார் கூறினர்.

