/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில எல்லை சாவடிகளில் கோவை ஐ.ஜி.,ஆய்வு
/
மாநில எல்லை சாவடிகளில் கோவை ஐ.ஜி.,ஆய்வு
ADDED : மே 02, 2024 07:05 AM
கிருஷ்ணகிரி : கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., பவானீஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்திற்கு சென்ற அவர், அங்கு செய்துள்ள பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள சோதனைச்சாவடிகளில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கர்நாடக மாநில எல்லைப்பகுதிகளிலுள்ள சோதனைச்சாவடிகளான ஜூஜூவாடி, கும்ளாபுரம், கக்கனுார், நல்லுார் உட்பட பல்வேறு சோதனைச்சாவடிகளை பார்வையிட்ட அவர், அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுப்ப வேண்டும் என்றும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என்றும், தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வேப்பனஹள்ளி அருகே, ஆந்திர மாநில எல்லைகளிலுள்ள சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தினார்.

