/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.8.27 லட்சம் காணிக்கை வசூல்
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.8.27 லட்சம் காணிக்கை வசூல்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.8.27 லட்சம் காணிக்கை வசூல்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.8.27 லட்சம் காணிக்கை வசூல்
ADDED : ஆக 02, 2024 01:38 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியிலுள்ள ஆஞ்சநேயர் சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த, 29ல் ஆடிக்கிருத்திகை திருவிழா நடந்தது. இதையொட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில், 11 உண்டியல்கள் வைக்கப்பட்டது. இதன் காணிக்கையை எண்ணும் பணிகள் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.
துறை ஆய்வாளர் சத்யா தலைமையில், பரம்பரை தர்மகர்த்தா கிருஷ்ணசந்த் முன்னிலையில், உண்டியல்களை பிரித்து, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், தனியார் கல்லுாரி மாணவர்கள், 20 பேரும், மகளிர் அமைப்பினர், 10 பேரும் ஈடுபட்டனர். உண்டியலில், 8,27,068 ரூபாயும், 5.400 மில்லி கிராம் தங்கம், 245 கிராம் வெள்ளி இருந்தது. உண்டியல் எண்ணும் பணிகளை இந்து முன்னணி அமைப்பினர் நேரடியாக கண்காணித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.