/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலவச வீட்டுமனை வழங்குவதில் இருட்டடிப்பு என புகார் மனு
/
இலவச வீட்டுமனை வழங்குவதில் இருட்டடிப்பு என புகார் மனு
இலவச வீட்டுமனை வழங்குவதில் இருட்டடிப்பு என புகார் மனு
இலவச வீட்டுமனை வழங்குவதில் இருட்டடிப்பு என புகார் மனு
ADDED : ஆக 13, 2024 05:44 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட்டேரி, அனு-மந்தீர்த்தம் பகுதிகளை சேர்ந்த, 11 பேர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதிகளை சேர்ந்த, வீடற்ற கூலித்தொழிலாளிகள், 110 பேர் இலவச வீட்டுமனை கேட்டு வி.ஏ.ஓ., முதல் ஆர்.டி.ஓ., கலெக்டர் வரை மனு அளித்தோம். ஜமாபந்தியிலும் மனு அளித்தோம். எங்களுக்கு வீட்டுமனை வழங்க பரிசீலிப்பதாக கூறிய அதிகாரிகள், இதில் யாருக்கும் இலவச வீட்டுமனை வழங்-காமல் குறிப்பிட்ட சிலருக்கும், தகுதியில்லாதோருக்கும் வீட்டு-மனை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து தகுதியான அனைவ-ருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.