/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவனத்தில் முறைகேடுஒப்பந்ததாரர்கள் மீது புகார் மனு
/
தனியார் நிறுவனத்தில் முறைகேடுஒப்பந்ததாரர்கள் மீது புகார் மனு
தனியார் நிறுவனத்தில் முறைகேடுஒப்பந்ததாரர்கள் மீது புகார் மனு
தனியார் நிறுவனத்தில் முறைகேடுஒப்பந்ததாரர்கள் மீது புகார் மனு
ADDED : மார் 04, 2025 01:32 AM
தனியார் நிறுவனத்தில் முறைகேடுஒப்பந்ததாரர்கள் மீது புகார் மனு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே, தம்மண்டரஹள்ளியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் காலை, இரவு என, 2 ஷிப்டுகளில், 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, 3 ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பணியாளர்களுக்கு பி.எப்., வழங்காமலும் கேன்டீனில் தரமற்ற உணவு வழங்குவதாகவும் கூறி, அந்நிறுவனத்தின், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்த போலீசார், 15 பேரை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர்.
அந்த மனுவில், அவர்கள் கூறியுள்ளதாவது: நிறுவனத்தில், எங்களை ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்துள்ளனர். ஊதிய உயர்வு வழங்க மறுக்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் எங்கள் பி.எப்., பணத்தில் வருடத்தில், 4 மாத தொகையை செலுத்துவதில்லை. இதன் மதிப்பு மட்டும், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
ஒப்பந்ததாரர்களுடன் நிறுவனமும் கைகோர்த்து எங்களை பழி வாங்குகிறது. கேன்டீனில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. விபத்து ஏற்பட்டால், தொழிலாளர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை. கேட்டால் மிரட்டுகிறார்கள். நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு அடிபட்டால் கூட, எங்கள் செலவில் மருத்துவச்செலவு செய்யும் அவலம் உள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.