/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கன்டெய்னர் கவிழ்ந்து தீ விபத்து ரூ.15 லட்சம் தீப்பெட்டி நாசம்
/
கன்டெய்னர் கவிழ்ந்து தீ விபத்து ரூ.15 லட்சம் தீப்பெட்டி நாசம்
கன்டெய்னர் கவிழ்ந்து தீ விபத்து ரூ.15 லட்சம் தீப்பெட்டி நாசம்
கன்டெய்னர் கவிழ்ந்து தீ விபத்து ரூ.15 லட்சம் தீப்பெட்டி நாசம்
ADDED : மார் 07, 2025 01:20 AM
பர்கூர்:விருதுநகர் மாவட்டம், சிவகாசி, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தீப்பெட்டி ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று, நேற்று முன்தினம் இரவு டில்லி புறப்பட்டது. லாரியை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் அப்பாஸ், 55, ஓட்டினார். மாற்று டிரைவராக ஷகீல் உடனிருந்தார்.
நேற்று காலை, சின்னமட்டாரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் லாரி சென்ற போது, எதிரே தாறுமாறாக வந்த பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் இடதுபுறமாக லாரியை திருப்பினார்.
அப்போது, ஆற்றுப்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது. லாரியிலிருந்த டிரைவர்கள் அப்பாஸ், ஷகீல் குதித்து தப்பினர்.
பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான வீரர்கள், லாரியில் தீயை அணைத்தனர். விபத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டிகள் எரிந்து நாசமாகின. கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.