/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொப்பூரில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
/
தொப்பூரில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : ஆக 17, 2024 04:13 AM
தொப்பூர்: கர்நாடக மாநிலத்தில் இருந்து, ஜவுளி லோடு ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருப்பூருக்கு புறப்பட்டது.
இதை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் வாசிமலை, 42; ஓட்டி வந்தார். கன்டெய்னர் லாரி தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக நேற்று மாலை, 5:30 மணிக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கிய வாசிமலைக்கு, கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து, தகவல் அறிந்த போலீசார் மற்றும் சுங்க சாவடி ரோந்து குழுவினர் ஒன்றிணைந்து, டிரைவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.