/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குவாரிகளால் வீடுகளில் விரிசல் கறுப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு
/
குவாரிகளால் வீடுகளில் விரிசல் கறுப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு
குவாரிகளால் வீடுகளில் விரிசல் கறுப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு
குவாரிகளால் வீடுகளில் விரிசல் கறுப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 01, 2024 04:55 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, குவாரி களில் வைக்கப்படும் வெடிகளால், வீடு-களில் விரிசல் ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள், தங்கள் வீடு-களில் கறுப்பு கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், பர்கூர் அடுத்த கொத்துாரில் பல ஆண்-டுகளாக கல்குவாரி இயங்கி வருகிறது. தற்போது அங்கு அதிக-ளவில் வெடிகள் வைத்து, பாறைகள் உடைக்கப்படுவதாக குற்றச்-சாட்டு எழுந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள், கலெக்டர் அலு-வலகத்திலும், கடந்த, 21ல் பர்கூரில் நடந்த, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாமிலும், கல்குவாரிகளை மூடக்கோரி மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து நேற்று, கொத்துார் பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் கறுப்பு கொடியேற்றி கல்குவாரிகளை மூடாத அதிகாரிகளுக்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற கிருஷ்ண-கிரி மாவட்ட கனிமவளத்துறை தாசில்தார் ஜெயபாலன், பர்கூர் தாசில்தார் திருமுருகன், பர்கூர் இன்ஸ்பெக்டர் வளர்மதி உள்-ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைய-டுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.