/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சி.எஸ்.ஆர்., நிதி மூலம் ஆசிரியருக்கு ஊதியம்;ஐ.என்.டி.யு.சி., ஏற்பாடு
/
சி.எஸ்.ஆர்., நிதி மூலம் ஆசிரியருக்கு ஊதியம்;ஐ.என்.டி.யு.சி., ஏற்பாடு
சி.எஸ்.ஆர்., நிதி மூலம் ஆசிரியருக்கு ஊதியம்;ஐ.என்.டி.யு.சி., ஏற்பாடு
சி.எஸ்.ஆர்., நிதி மூலம் ஆசிரியருக்கு ஊதியம்;ஐ.என்.டி.யு.சி., ஏற்பாடு
ADDED : மே 04, 2024 09:47 AM
ஓசூர்: ஓசூர் அரசு பள்ளியில் ஆசிரியரை நியமித்து, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து மாத ஊதியம் கொடுக்க, ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலர் மனோகரன் ஏற்பாடு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் (தமிழ், ஆங்கில வழி), 1,300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியராக பத்மாவதி உள்ளார். இப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால், மாணவ, மாணவியரின் கல்வித்திறன் பாதிக்கும் நிலை உருவானது.
இதையடுத்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் இணைந்து, ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலர் மனோகரனை சந்தித்து, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, ஆசிரியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையேற்று, மிண்டா நிறுவனத்திடம் பேசிய ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலர் மனோகரன், வரும் ஜூன் முதல் அடுத்த ஓராண்டிற்கு, பள்ளியில் ஆசிரியர் ஒருவரை நியமித்து, அவருக்கு மாத ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி, நேற்று மனோகரனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.