/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு
/
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு
ADDED : ஜூன் 10, 2024 02:35 AM
ஓசூர்,: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டி - கோபசந்திரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அரசு பஸ், லாரி, கார் என மொத்தம், 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இதனால், பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சூளகிரி போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். விபத்தால், சில மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, 3 கி.மீ., துாரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதேபோல், ராயக்கோட்டை பகுதியிலுள்ள சூளகிரி, கெலமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி சாலைகளில் நேற்று திடீரென கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு நின்றன. ராயக்கோட்டை போலீசார் நீண்ட நேரம் போராடி போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல முயன்ற வாகனங்களும் நெரிசலில் சிக்கின.
குரூப் 4 தேர்வு, முகூர்த்த நாள், ஞாயிற்றுக்கிழமை, இன்று பள்ளிகள் திறப்பு போன்ற காரணத்தால், வாகன போக்குவரத்து நேற்று சாலைகளில்
அதிகளவில் இருந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.