/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் மாயமான வாலிபர் ஓடையில் சடலமாக மீட்பு
/
ஓசூரில் மாயமான வாலிபர் ஓடையில் சடலமாக மீட்பு
ADDED : மே 17, 2024 09:00 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணி பகுதியை சேர்ந்தவர் தசரதன், 23. ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக பணியாற்றினார்.
கடந்த மார்ச், 28ல் நிறுவனத்தில் இருந்து வெளியே சென்றவர்; திரும்பவில்லை. அவரது தந்தை சம்பத், புகார்படி சிப்காட் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் உள்ள ஓடையில், அழுகி எலும்பு கூடாக வாலிபர் சடலம் கிடப்பதாக, ஹட்கோ போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சந்தேகத்தின்படி, தசரதன் பெற்றோரை அழைத்து போலீசார் காட்டிய போது, இறந்த வாலிபர் அணிந்திருந்த உடைகள், ஷீ, மொபைல்போன் ஆகியவற்றை வைத்து, மாயமான தசரதன் என்பது உறுதி செய்யப்பட்டது.
சிப்காட் போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

