/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
ADDED : மே 28, 2024 09:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 4 நாட்களாக மழை இல்லாதது மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, 388 கன அடியாக இருந்த நிலையில், நேற்று, 12 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற வாய்க்கால் மூலம், 12 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 44.85 அடியாக நீர்மட்டம் இருந்தது.
இதேபோல் மழையின்றி, பாம்பாறு அணை மற்றும் சின்னாறு அணைக்கு நீர்வரத்தும் இல்லை. தண்ணீர் திறப்பும் இல்லை. பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் திறப்பு இல்லாத நிலையில், 21 கன அடிநீர் மட்டும் வந்து கொண்டுள்ளது. மழை பெய்யாததால், வெப்பம் வழக்கம்போல் பொதுமக்களை வாட்டி வருகிறது.