sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

/

காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 26, 2024 03:18 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காலை உணவு திட்டம் கண்காணிப்பு பணியில் இருந்து, ஆசிரி-யர்களை விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்(டிட்டோ ஜாக்) சார்பில், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலகம் முன்பு நேற்று மாலை, 5:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் பேசியதாவது: காலை நேரத்தில் பெண்களுக்கு இருக்கும் அதிகமான பணிகளை கருத்தில் கொள்ளாமல், காலை உணவு திட்டத்தை தினமும் கண்-காணிக்க உத்தரவிட்டதன் விளைவாக, கல்குறுக்கி ஆசிரியை விபத்தில் இறந்தார். பல சிறு விபத்துகள் இன்னும் வெளியே வர-வில்லை. காலை உணவு திட்டத்திற்காக முன்கூட்டியே செல்ல வேண்டும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் நடக்கும். நெடுந்தொலைவு உள்ள பள்ளிக்கு காலையில், 6:00 அல்லது, 7:00 மணிக்கு செல்ல வேண்டி வரும். சில இடங்களுக்கு பஸ் வசதியும் இருக்காது. இந்த கூடுதல் வேலைபளு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறனை கூட பாதிக்கலாம். இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கண்கா-ணிக்கும் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். அதற்கு பதிலாக, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பஞ்., தலைவர், வார்டு உறுப்பினர், கவுன்சிலர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை கண்காணிக்க பயன்படுத்தலாம்.

இவ்வாறு, ஆசிரியர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us