/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவ கழிவு குப்பை மறுசுழற்சி நிறுவனத்தை அகற்ற ஆர்ப்பாட்டம்
/
மருத்துவ கழிவு குப்பை மறுசுழற்சி நிறுவனத்தை அகற்ற ஆர்ப்பாட்டம்
மருத்துவ கழிவு குப்பை மறுசுழற்சி நிறுவனத்தை அகற்ற ஆர்ப்பாட்டம்
மருத்துவ கழிவு குப்பை மறுசுழற்சி நிறுவனத்தை அகற்ற ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2024 06:19 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி சிப்காட்டில் கடந்த ஓராண்டாக மருத்துவ கழிவு-களை மறு சுழற்சி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், தமிழகம் முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவமனை-களில் இருந்து மருத்துவ கழிவுகளை சேகரித்து எரிக்கின்றனர். அதனால் ஏற்படும் புகையால் சுற்றுப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகிறது.
நிலத்தில் குழி தோண்டி மருத்துவக் கழிவுகளை புதைப்பதால், இப்பகுதி நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமலும், சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் குடிநீர் குடிக்க முடியாமலும் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.மேலும், மனிதர்களுக்கு உடல் நல பாதிப்புகளும், விளை நிலங்-களில் விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை பராம-ரிக்க முடியாமலும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, மருத்துவ கழிவு மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தை அகற்ற, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ராஜ-சேகர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட, பா.ம.க.,வினர் அந்த நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனி-வாசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாது-காப்பு பணியில் இருந்தனர்.