தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ த.வா.க., ஆர்ப்பாட்டம்

த.வா.க., ஆர்ப்பாட்டம்

த.வா.க., ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 28, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப்., அருகே உள்ள உரிகம் பகு-தியில், பல தலைமுறையாக வசித்து வந்த தமிழர்களின், 20 வீடுகள், ரயில்வே மேம்பால பணிக்கு இடையூறாக இருந்ததாக கூறி சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டன.

தமிழர்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் வீடுகள் இடிக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்-பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மாற்று ஏற்பாடுகளை வழங்க வலியுறுத்தியும், தமிழக எல்லையான ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செய-லாளர் கார்த்திக் சீனிவாஸ் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் நெப்போலியன், கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் மாரிமுத்து, பொருளாளர் மல்லி-கார்ஜூன் உட்பட பலர் பங்கேற்றனர். ஓசூர் சட்டசபை தொகுதி மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us