தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வாகனம் மோதி விவசாயி பலி

வாகனம் மோதி விவசாயி பலி

வாகனம் மோதி விவசாயி பலி


ADDED : செப் 28, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டையை சேர்ந்தவர் கோபிநாத், 35. விவசாயி;

இவர் திருவண்ணாமலை கோவிலில் குடும்பத்துடன் கிரிவலம் சென்று விட்டு, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.ஓசூர் மார்க்கெட்டில் தான் வழங்கிய பூ மற்றும் காய்கறிகளுக்கு பணம் வாங்கி வர, ஹீரோ பிளண்டர் பைக்கில், ஓசூர் நோக்கி சென்றார். அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள என்.கொத்துார் பஸ் ஸ்டாப் அருகே மதியம், 3:20 மணிக்கு சென்-றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பொலிரோ பிக்கப் வேன், பைக் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே பலி-யானார். அவரது மனைவி அம்பிகா, 31, புகார் படி, விபத்திற்கு காரணமான தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளியை சேர்ந்த பிக்கப் வாகன டிரைவர் முத்துராஜ், 33, மீது வழக்குப்ப-திந்து, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us