தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயியை தாக்கிய இருவர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய இருவர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய இருவர் மீது வழக்கு


ADDED : செப் 28, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சாதிநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி, 65. விவசாயி. இவர் கடந்த ஒரு மாதத்-திற்கு முன், கிராமத்தினர் தங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக கூறி, மாவட்ட எஸ்.பி., அனிதா-விடம் புகார் மனு கொடுத்தார்.

அதனால் கடந்த, 25ம் தேதி சின்னசாமி மற்றும் மற்றொரு தரப்பி-னரை அழைத்து, பாரூர் போலீசார் ஸ்டேஷனில் வைத்து விசா-ரணை நடத்தினர். பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து சென்ற நிலையில், சின்னசாமியிடம் தகராறு செய்த ஒரு தரப்பினர், அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். இது தொடர்பாக, சின்னசாமி புகார் படி, சாதிநாயக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன், 55, ராஜா, 55, ஆகிய இருவர் மீது, பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us